திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கூட்ட நெரிசலை தவிர்க்க ஆட்டோ ஓட்டுனர்களுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு போக்குவரத்து ஆய்வாளர் காவல் ரமேஷ் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் திமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி ஆறுமுகம், கம்யூனிஸ்ட் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சரவணன், அண்ணா தொழிற்சங்க ஓட்டுநர் அம்மையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஏடிஎஸ்பி சதீஷ்குமார், ஆர்டிஓ சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.