வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ

71பார்த்தது
வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மேலாரனி ஊராட்சி, தாங்கல் பகுதியில் பகுதிநேர நியாயவிலை கடையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அதேபோல், சிறுவள்ளூர் ஊராட்சியில் ரூபாய் 10. 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலை கடை, ஆதமங்கலம்புதூர் ஊராட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 9. 99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பயணியர் நிழற்ககுடை, வெங்கட்டம்பாளையம் ஊராட்சியில் ரூபாய் 49. 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மேநீர் தேக்க தொட்டி, காந்தப்பாளையம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணி, மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் அங்கன்வாடி மற்றும் புதிய நியாயவிலை கட்டிடம், மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 7. 00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கலையரங்கம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார்.

உடன், கலசப்பாக்கம் ஒன்றிய கழக செயலாளர்கள் சுப்ரமணியன் மற்றும் சிவக்குமார், ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகர், ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியன் திமுக கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி