தி. மலை: தேசிய மக்கள் நீதிமன்றம்

72பார்த்தது
தி. மலை: தேசிய மக்கள் நீதிமன்றம்
திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் செயல்படும் மாற்று தீர்வு மையத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. அதேபோல், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செங்கம், போளூர், தண்டராம்பட்டு, கலசபாக்கம் உள்ளிட்ட மொத்தம் 7 இடங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மதுசூதனன் தலைமை தாங்கினார். அதில், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெயசூர்யா, மாவட்ட மகிளா கோர்ட் நீதிபதி சுஜாதா, போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட் நீதிபதி பார்த்தசாரதி, முதன்மை சார்பு நீதிபதி முகமது ரியாஸ், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சக்திவேல் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழக்குகளுக்கு தீர்வு கண்டனர்.

அப்போது, வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டன. அதன்படி, மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம், மொத்தம் 3, 545 வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டன. அதில், சமரச தீர்வுக்கு உடன்பட்டதன் அடிப்படையில், வங்கிகள் தொடர்பான 371 வழக்குகள் மற்றும் விபத்து காப்பீடு உள்ளிட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 1, 678 வழக்குகள் உட்பட மொத்தம் 2, 049 வழக்குகளுக்கு சமரசம் ஏற்படுத்தப்பட்டது

தொடர்புடைய செய்தி