ஸ்ரீமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

51பார்த்தது
ஸ்ரீமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அக்ராபாளையம் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஏப். 9-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் கூழ்வாா்க்கும் விழா தொடங்கியது. அதன்படி, காலை, இரவில் சுவாமிக்கு தீபாராதனை, அம்மன் கரகம் வீதி உலா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாலை 3 மணிக்கு கோயில் முன் வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் பக்தா்கள் கொண்டு வந்த கூழ் ஊற்றப்பட்டு பம்பை, உடுக்கை, சிலம்புகளுடன் அம்மனை வா்ணித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, மாரியம்மன் கரகம், பரசுராமா் சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழாவில், ஏராளமான பக்தா்கல் கலந்து கொண்டு நோ்த்திக் கடன் செலுத்தினா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவினா், கிராமமக்கள் செய்திருந்தனா்.

தொடர்புடைய செய்தி