இயற்கை நிலை பயன்படுத்த முடியாத சூழல் தொடர்ந்து நிலவுவதாக திருப்பூர் டையிங் மற்றும் கெமிக்கல் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் திருப்பூரில் தெரிவித்துள்ளனர்
திருப்பூர் சாய மற்றும் கெமிக்கல் வியாபாரிகள் சங்கத்தின் ஆண்டு விழா கூட்டம் இன்று நடைபெற்றது இதில் எம் எஸ் எம் இ க்கள் போல 45 நாட்கள் வரி செலுத்த அவகாசம் தேவை என்றும்
பின்னலாடை வர்த்தகத்தில் 30000 கோடி ஏற்றுமதி என்றால் அதில் 20% இந்தப் பங்கை சாய மற்றும் கெமிக்கல் தொழில் மேற்கொள்வதாக தெரிவித்த சங்க நிர்வாகிகள்.
இயற்கை நிறமிகளை பயன்படுத்துவதால் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு கூடுதலாக 30 முதல் 40 சதவீதம் செலவினங்கள் ஏற்படுவதால் காலம் காலமாக பயன்படுத்தும் கெமிக்கிலையே பின்னலாடி உற்பத்தியாளர்கள் பயன்படுத்துவதாகவும் மேற்கொண்டு நிறத்தின் தன்மை இயற்கை நிறமூட்டிகளால் சரிவர கொடுக்க முடிவதில்லை என்றும் இதனால் கெமிக்கல் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் ஆனால் காலம் காலமாக பயன்படுத்தும் இந்த நிகழ்வுகளால் உடலுக்கு எந்த கேடும் இல்லை என்பதால் அதனையே பின்னலாடை உற்பத்தியாளர்களும் தொழில் போட்டி காரணமாக பயன்படுத்தப்படுவதாகவும் விளக்கம் அளித்தனர் மேலும் கெமிக்கல் மற்றும் சாய வியாபாரிகள் சங்கம் சார்பில் விரைவில் டெட்ரேஷன் ஆரம்பிக்கப்பட்டு அகில இந்திய அளவில் தங்கள் கோரிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.