இலவசபேருந்தில் பெண்ணுக்கு அபராதம் பரிசோதகர் பணியிடை நீக்கும்

73பார்த்தது
இலவச பேருந்தில் பயணம் செய்த பெண்ணுக்கு அபராதம் டிக்கெட் பரிசோதகர் பணியிட நீக்கும்

பல்லடம் அருகே உள்ள தெற்கு பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு இலவச பேருந்தில் பல்லடம் சென்றுள்ளார். அப்போது அவர் இலவச டிக்கெட்டை வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் ஆய்வு செய்தபோது அந்த பெண்ணிடம் இலவச டிக்கெட் இல்லாததால் ரூ. 200 அபராதம் விதித்துள்ளார். அந்த பெண்ணிடம் பணம் இல்லாததால் பஸ்ஸின் நடத்துனற்க்கு ஜி. பே மூலம் பணம் செலுத்தியுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதை அடுத்து இந்த சம்பவத்தை விசாரித்த போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அபராதம் விதித்ததற்கு ரசீது வழங்கவில்லை என அந்த பெண் கூறியதால் டிக்கெட் பரிசோதகர் மீது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நடத்துனர் பெயரோ அல்லது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிக்கெட் பரிசோதகர் பெயரோ போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி