திருச்சி தஞ்சை திருமண்டலத்தில் உள்ள உடுமலை மறை மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை மறை மாவட்டத்தின் தலைவரும் இதுவரை உடுமலைப்பேட்டை கிறிஸ்த்துநாதர் ஆலயத்தில் சேகர தலைவராகவும் குருவானராகவும் பணி செய்த ஆயர்
செல்வராஜ் பணி மாறுதலாக உடுமலைப்பேட்டை இம்மானுவேல் ஆலயத்தில் சேகர் தலைவராகவும் குருபானராகவும் பதவி ஏற்று கொண்டார்கள்.
இதுவரை உடுமலை இம்மானுவேல் ஆலயத்தில் பணி செய்த ஆயர் அம்மா மேரி செல்வராணி மீண்டும் இம்மானுவேல் ஆலயத்தில் உதவி குருவானவராக பதவி ஏற்று கொண்டார்கள்.
இந்த விழாவில் உடுமலை இம்மானுவேல் ஆலயத்தின் செயலாளர் பால் ஜெயச்சந்திரன் பொருளாளர் ஜெயகுமார் கமிட்டி உறுப்பினர் மலர் டி ஸ்டீபன் மற்றும் கமிட்டி அங்கத்தினர்களும் சபை மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.