தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம்

1069பார்த்தது
தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம்
அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு மற்றும் அனைத்து ஓய்வு பெற்றோர் நல சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் விளக்க வாயில் கூட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் அனைத்து ஓய்வு பெற்றோர் நல சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சங்கங்கள் சார்பாக பலவித கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்க கூட்டம் நேற்று காங்கயம் அரசு பேருந்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்திய தொழிற் சங்கங்களின் மையம் காங்கயம் கிளைச் செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் போக்குவரத்து கழகத்தின் வரவுக்கும் செலவுக்கும் உண்டான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும் எனவும், ஓய்வூதிய பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண வேண்டும் எனவும், 15வது ஊதிய ஒப்பந்தத்தை பேசி உரிய முடிவை எடுக்க வேண்டும் எனவும், காலி பணியிடங்களை முறையாக பூர்த்தி செய்ய வேண்டும் எனவும், வாரிசு வேலைகளை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் பலவித கோரிக்கைகளை முன் வைத்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் அனைத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்புகளை சார்ந்த பணியாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி