திருப்பூர் மாவட்டம் ஊதியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நிழலி கிராமம் எல்லப்பாளையம் புதூரைச் சேர்ந்தவர் தெய்வத்தால் (வயது 67). இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தார். கடந்த 15 வருடங்களாக வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்தவுடன் அடிக்கடி நெஞ்சுவலி உள்ளதாகவும் கூறிவந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை குறுக்கு பாளையத்தில் வசிக்கும் தனது மகளுடன் செல்போனில் பேசிய அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும், இதனால் என்னால் இருக்க முடியவில்லை எனவும் கூறிவிட்டு வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்துள்ளார். தகவல் அறிந்த தெய்வாத்தாலியின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது தெய்வத்தால் கிணற்றில் மிதந்து கொண்டு இருந்ததை கண்டு கதறினார். பின்னர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றிலிருந்து மூதாட்டி உடலை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெய்வத்தால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக ஊதியூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.