தாராபுரம்: கோட்டைமேடு உத்தர வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1169பார்த்தது
தாராபுரம்: கோட்டைமேடு உத்தர வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற
கோட்டைமேடு உத்தர வீரராகவ பெருமாள் கோவிலில் உள்ளது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 4-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் இன்று வரை பகல் பத்து உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

பெருமாளுக்கு மோகினி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. 3 மணிக்கு கஸ்தூரி அரங்கநாதரின் உற்சவ சிலைக்கு திருமஞ்சனம் நடந்தது. இதில் பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அதிகாலை 4. 45 மணிக்கு கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பின்னர் சப்பரத்தில் எழுந்தருளிய பெருமாள் பரமபத வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டார்.

அதைத்தொடர்ந்து காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளே சென்ற பக்தர்கள் பரமபத வாசலில் நுழைந்து கோவிலை சுற்றி வந்து கோபுர தரிசனம் செய்த பின்னர் மூலவரை வழிபட்டு வெளியே வரும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.


தாராபுரம் குண்டடம் மூலனூர் அலங்கியம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். கொரோனா பரவல் காரணமாக கோவிலில் அமர பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் முக கவசம் இல்லாமல் வந்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பாதுகாப்பு பணிகளில் போலீசார், ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

டேக்ஸ் :