சாலையோர கடைகளை முறைப்படுத்த பேச்சுவார்த்தை

56பார்த்தது
சாலையோர கடைகளை முறைப்படுத்த பேச்சுவார்த்தை
சாலையோர கடைகளை முறைப்படுத்த அவினாசி சிறப்புநிலைப் பேரூராட்சி மூலமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, நிறைவேற்றாமல்காலம் தாழ்த்தி வருவதாகவும், இதனால் பல்வேறு விதமான வரிகள் கட்டி வியாபாரம் செய்து வரும் நிரந்தர கடை வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்து இருந்தனர். சாலையோர கடைகளை தனி இடம் ஒதுக்கி பேரூராட்சி நிர்வாகத்தால் நிறைவேற்றப்பட்ட தீர் மானத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றிட வேண்டும் என அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரியுள்ளனர். அவினாசி அனைத்து வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்கும் பொருட்டு கடையடைப்பு, தொடர் கடையடைப்பு, முற் றுகை போராட்டங்கள், உண்ணாவிரதம் போன்ற முன்னெடுப் புகள் எடுப்பதாக அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், அறிவித்திருந்தனர்.
எனவே இதுதொடர்பாக, அவினாசி தாலூகா அலுவலகத்தில் தாசில்தார் சந்திரசேகர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம் ( இதையடுத்து தாசில்தார் உரிய ஆய்வு செய்து, ஏற்கனவே உள்ள சாலை யோர வியாபாரிகளை பாதிக்காத வகையில், அவர்களது பட்டியலை மறுபரிசீலனை செய்து, விரைவில் தீர்வு வழங்கப்படும் என்றார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி