உடுமலை திருமூர்த்தி அணையின் முக்கிய கால்வாயான காண்டூர் கால்வாய் பகுதியில் அருகில் உள்ள மதகில் நீர் கசிவு இருந்தது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மதகில்
அதிகாரிகள் தரப்பில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது நீர் கசிவுக்கு ஏதுவாக அதன் கட்டுமானத்தை மர்ம நபர்கள் உடைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் அளிக்கபட்டது. இந்த நிலையில் போலீசார் இன்று கால்வாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விவசாயிகள் உடன் இருந்தனர். இதுகுறித்து விவசாயிகளை கூறுகையில், தற்சமயம் மீது விவசாயிகள் மீது பொய் செய்தியை பரப்பி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்
ஷட்டர் இயக்கும் நிலையில் உள்ளதால் சிறிது நீர் வெளியேறி உள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில் இரண்டு முறை காண்டூர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வீணாவதை பார்த்தால் அவசர காலத்தில் ஷட்டர்களை திறக்க முடியாது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஷட்டர்களை இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும். அத்துடன் அதே இடத்தில் மீதமுள்ள இரண்டு ஷட்டர்களில் கான்கிரீட் கலவையை நீக்கி இயங்கும் நிலையில் வைக்க வேண்டும்
இல்லை என்றால் விவசாயிகளை ஒன்றிணைத்து காண்டூர் கால்வாயில் குதித்து போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர்.