விபத்தில் தையல் தொழிலாளி பலி

79பார்த்தது
விபத்தில் தையல் தொழிலாளி பலி
விபத்தில் தையல் தொழிலாளி பலிதிருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி எம். ஜி. ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் அண் ணாமலை (வயது 43). தையல் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு திருப்பூரில் இருந்து அவினாசி நோக்கி மோட்டார்சைக்கி ளில் சென்று கொண்டிருந்தார். அம்மாபாளை யத்தை கடந்து சென்றபோது ஒரு பெண் திடீ ரென சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அந்த பெண் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார்சைக்கிளை வலதுபுறமாக திருப்பி உள்ளார். அப்போது சாலையின் மையப்பகு தியில் இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி அண்ணாமலை கீழே விழுந்தார். இதற்கிடை யில் அந்த வழியாக வந்த வாகனம் அண் ணாமலை மீது மோதி விட்டு நிற்காமல் சென் றது. இதில் அவர் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி