பாலக்கரையில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

75பார்த்தது
பாலக்கரையில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது
திருச்சி மாநகரில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனைகள் அதிக அளவில் நடைபெற்று வருவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருச்சி மாநகர போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலைய பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை உள்ளதா என்று அடிக்கடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து திருச்சி பாலக்கரை கெம்ஸ்டவுன் பகுதியில் அசோக் குமார் என்ற போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் போலீசாரை பார்த்தவுடன் அங்கிருந்து நழுவி ஓட முயன்றனர். இதையடுத்து அசோக்குமார் மற்றும் போலீசார் அந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தபோது திருச்சி பாலக்கரை ஆலம் தெரு சேர்ந்தவர் ஆரிப்கான் ( வயது 20), முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய செல்வகுமார் (வயது 21)என்பது தெரிய வந்தது. மேலும் இந்த இரண்டு வாலிபர்களும் சேர்ந்து கெம்ஸ்டவுன் பகுதியில் போதை மாத்திரைகளை சிறுவர்களுக்கு விற்க இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பாலக்கரை போலீசார் ஆரிப் கான், ஆரோக்கிய செல்வகுமார் ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

டேக்ஸ் :