திருவரம்பூரில் தூய்மை பணி செய்த முன்னாள் மத்திய அமைச்சர்

574பார்த்தது
திருவரம்பூரில் தூய்மை பணி செய்த முன்னாள் மத்திய அமைச்சர்
திருச்சி மாநகராட்சி 40ஆவது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் பகவதிபுரத்தில் பாஜகவினர் பொதுமக்களுடன் இணைந்து மேற்கொண்ட தூய்மை இந்தியா திட்டத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.முன்னாள் மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணன் திருச்சி மாநகராட்சி 40 வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அந்த பகுதியில் உள்ள குப்பைகளை பாஜகவினர் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து சுத்தம் செய்யும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது திருச்சி விமான நிலையத்தின் இரண்டாவது நிலையம் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது மேலும் சாலை திட்டங்கள், ஆயுள் கார்ப்பரேஷன் திட்டங்கள் ஆகியவற்றை மக்களுக்காக அர்ப்பணிக்கிறார். இந்தியாவிற்கு மட்டுமல்லாது தமிழ் கூறும் நல்லுலகம் எங்கெல்லாம் இருக்கிறதோ உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு திருச்சியை மையமாக கொண்டு அவர்களது பணி பயணத்தை அமைக்க முடியும் என்பதை உருவாக்கி கொடுத்துள்ள பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வோம். பிரதமர் மோடி திட்டங்களை வகுத்துபொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி நம்மை வீட்டை, நாம் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு வலியுறுத்தி உள்ளது பாஜகநிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி