திருச்சியில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்

590பார்த்தது
திருச்சியில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் பயன்படுத்த வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் பயன்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமான எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரில் உள்ள காதி கிராப்ட் முன்பு மாநகர மேற்கு மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் தலைமையில், மாநகர கிழக்கு மாவட்ட செயலாளர் கனியமுதன், மாவட்ட செயலாளர் சக்திஆற்றலரசு, வழக்கறிஞர் முசிறி கலைச்செல்வன், குருஅன்புச்செல்வம் ஆகிய முன்னிலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கவன ஈர்ப்பு உரையை திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, ஆகியோர் வழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சமீபத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட புயல் வெல்ல பாதிப்புகளை தீவிர பாதிப்புகளாக அறிவித்து உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு இயந்திரத்திற்கு பதில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

தொடர்புடைய செய்தி