நான் திமுக விசுவாசி ஊராட்சி தலைவர் பேட்டி

1089பார்த்தது
நான் திமுக விசுவாசி ஊராட்சி தலைவர் பேட்டி
திருச்சி கம்பரசம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பவள்ளியின் கணவர் ரவிச்சந்திரன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததாக சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரவி வருகிறது. இதனைக் கண்டித்தும், இதற்கு மறுப்பு தெரிவித்தும் கம்பரசம்பேட்டை முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் நிருபர்களிடம் பேசினார் திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கம்பரசம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பவள்ளி எனது மனைவி. நான் திமுகவின் உண்மை விசுவாசியாக தொடர்ந்து இருந்து வருகிறேன். மேலும் கடந்த 3 முறை கம்பரசம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளேன். கடந்த ஜனவரி 1ஆம் தேதி தொழில் அதிபர் ஒருவரை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து சொல்வதற்காக சென்றபொழுது அங்கு வந்த அதிமுக முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரனை எதிர்பாராத விதமாக சந்திக்க நேரிட்டது. மரியாதை நிமித்தமாக அவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன். இந்த சந்திப்பை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் கம்பரசம் பேட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம். ஆர். பி. ரவிச்சந்திரன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் என்ற தவறான செய்தியை சமூக வலைத்தளங்களில் எனக்கு பிடிக்காத சிலர் பரப்பி வருகின்றனர். நான் என்றுமே திமுகவின் உண்மை விசுவாசி தான் என்பதை இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்புடைய செய்தி