தடகள போட்டியில் சிவிபி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

56பார்த்தது
96-வது மாநில சீனியர் தடகள போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பேட்டிகளின் முடிவில் ஆண்கள் பிரிவில் சி. வி. பி. அகாடமி 90 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. 2-வது இடத்தை 51 புள்ளிகள் பெற்ற எஸ். டி. ஏ. டி. அணி பெற்றது. பெண்கள் பிரிவில் ஸ்பார்க் அகாடமி 63 புள்ளிகளுடன் முதலிடத்தையும், சி. வி. பி. அகாடமி அணி 62 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்தன. மொத்தத்தில் 10 தங்கம், 3 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களுடன் 152 புள்ளிகள் பெற்ற சி. வி. பி. அகாடமி அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சி. வி. பி. அகடமி வீரர் யுகேந்திரன் போல்வால்டில் 5. 16 மீட்டர் உயரம் தாண்டி தங்க பதக்கம் வென்றார்

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தடகள சங்க மாநில செயலாளர் லதா, திருச்சி மாவட்ட தடகள சங்கத் தலைவர் மயில்வாகனன், பனானா லீப் மனோகரன் ஆகியோர் பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
தடகள சங்க செயலார் ராஜு, செய்தி தொடர்பாளர் நீலமேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்ற சி. வி. பி. ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைவராக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் உள்ளார். இந்நிலையில் சி. வி. பி. அகாடமி அணியினர் சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து விஜயபாஸ்கர் நேரில் சென்று வீரர்-வீராங்கனைகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி