திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே மணல் கடத்தி வந்த வேனை காட்டுப்புத்தூர் போலீஸார் பறிமுதல் செய்து தப்பி ஓடிய ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
காட்டுப் புத்தூர் காடுவெட்டி காவிரி ஆற்றில் இருந்து வேனில் மணல் கடத்தப்படுவதாக தகவலறிந்த காட்டுப்புத்தூர் போலீஸார் தொட்டியம் காட்டுப்புத்தூர் சாலையில் காடுவெட்டி மாரியம்மன் கோயில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். , அவ்வழியாக வந்த வேனை தேக்கி சோதனையிட்டபோது, வேனை ஒட்டி வந்த ஓட்டுநர் வேனை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். இதனைத் தொடர்ந்து போலீஸார் சோதனையிட்டதில் வேனில் சட்ட விரோதமாக காவிரி ஆற்று மணல் கடத்தி வருவது தெரிந்து. வேனை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டதில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தவர் காடுவெட்டி மேலவழிகாடு பகுதியை சேர்ந்த செல்வம் மகன் ராகுல் (26) என தெரியவந்தது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.