சர்வ கட்சியின் சார்பில் தேமுதிக தலைவருக்கு மரியாதை

551பார்த்தது
தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவையொட்டி திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அனைத்து கட்சியின் சார்பில் மௌன ஊர்வலம் மற்றும் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது ‌. இந்த கூட்டமானது தேமுதிக திருச்சி மாவட்ட கழக செயலாளர் ஆர். பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மணப்பாறை பகுதியை சேர்ந்த அனைத்து கட்சி நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த ஊர்வலமானது திருச்சி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தொடங்கி ராஜவீதி வழியாக காமராஜர் சிலை வழியாக மணப்பாறை பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. அதனை அனைத்து கட்சியின் நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி