முற்றுகையிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள்!

52பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக விவசாய பெயர்கள் பெரும் சேதம் அடைந்தது, இந்நிலையில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த மானாவரி விவசாய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் அதிமுகவினர் மற்றும் விவசாயிகள் (05. 01. 2024) வெள்ளிக்கிழமை தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டனர். இதையடுத்து விவசாயிகள் மற்றும் அதிமுகவினரிடம் அதிகாரிகள் தரப்பில் இருந்து அமைதிப் பேச்சுவார்த்தை அழைப்பு விடுத்து 04-01-2023 வியாழக்கிழமை அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்கவிருந்தது. ஆனால் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விவசாயிகள் மற்றும் கட்சியினர் இங்கு வந்து நீண்ட நேரமாக காத்திருந்தும் தற்போது வரை கோட்டாசியர் மற்றும் வட்டாட்சியர் பேச்சு வார்த்தைக்கு வராத காரணத்தினாலும், அலுவலகத்தில் உட்காருவதற்கு இருக்கைகளும் போடப்படாததால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கட்சியினர் அலுவலகத்திற்கு உள்ளே வட்டாட்சியர் அறையை சூழ்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி