தூத்துக்குடி குறிஞ்சி நகர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு 500 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசும்போது தமிழக முதல்வர் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை விடுபட்டவர்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு விரைவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் கடந்த ஆட்சியின் போது 10 மணிக்கு கடைகள் அடைக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இரவு 12 மணி வரை கடைகள் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் எஸ் ஆர் ஆனந்த சேகரன் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மாநகரச் செயலாளர் எஸ் ஆர் ஆனந்த சேகரன் பெருமாள் கோவில் அறங்காவல குழு தலைவர் செந்தில்குமார் மாநில பேச்சாளர் சரத் பாலா வட்டச் செயலாளர்கள் கதிரேசன் வழக்கறிஞர் சதீஷ்குமார் உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.