தூத்துக்குடி மாவட்டத்தின் பிரதான தொழில்களில் ஒன்றானது உப்பள தொழில் சுமார் 30-ஆயிரம் ஏக்கருக்கு மேலான பரப்பளவில் இங்கு உப்பு உற்பத்தியானது நடைபெறுகிறது இந்த உப்பள தொழிலை நம்பி சுமார் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மிதமான மற்றும் கனமழையானது பெய்து வருகின்றது இதனால் உப்பு தொழில் பாதிப்பு அடைந்துள்ளது மேலும் இந்த மழை காரணமாக உப்பு உற்பத்தி செய்யகூடிய பாத்திகளில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளதால் உப்பு உற்பத்தி செய்யமுடியாத சூழ்நிலை உள்ளது மேலும் மழைக்கு முன்னதாக ஏற்கனவே உற்பத்தி செய்து வைத்துள்ள உப்புகளை உப்பளங்களில் மொத்தமாக சேகரித்து தார்பாய்கள் கொண்டு மூடி வைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மிக கனமழையினால் தூத்துக்குடி மாவட்டம் மிகவும் பாதிப்பு அடைந்தது மேலும் உப்பள தொழில் கோடி கணக்கான நஷ்டம் ஏற்பட்டது எனவே கடந்த ஆண்டைபோல் இந்த ஆண்டும் கனமழை பெய்துவிடுமோ என்ற அச்சத்தில் தான் உப்பள தொழிலாளர்கள் உள்ளனர்.