தூத்துக்குடியில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான கல்லறை தோட்டத்தில் தங்களது முன்னோர்களின் உறவினர்களின் கல்லறைகளுக்கு கிறிஸ்தவர்கள் மலர்தூவி மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு
ஆண்டுதோறும் நவம்பர் இரண்டாம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஆத்மாக்களின் திருநாள் என்று அழைக்கப்படும் கல்லறை திருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்தார் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்கள் மற்றும் உறவினர்கள் நினைவாக அவர்கள் ஆத்மா சாந்தி பெற அவர்கள் புதைக்கப்பட்ட கல்லறைகளுக்கு அதிகாலை சென்று சுத்தம் செய்து மலர் தூவி மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வழிபடுவது வழக்கமாகும்.
அந்த வகையில் தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியில் அமைந்துள்ள கல்லறை தோட்டத்தில் இன்று அதிகாலை முதலே ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்கள் மற்றும் உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து மலர் தூவி மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி குடும்பத்துடன் சென்று வழிபாடு நடத்தினர். இந்த கல்லறை திருநாள் தங்களுக்கு மிகவும் முக்கியமான நாள் தங்கள் முன்னோர்களின் ஆன்மா இறைவனிடத்தில் இளைப்பாறுவதற்காக தாங்கள் வழிபாடு நடத்தியதாக கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.