டெல்லியில் இருந்து லே நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்ப காரணங்களால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (ஜூன் 19) காலை 6.30 மணிக்கு 180 பேருடன் இண்டிகோ விமானம் (6E 2006) காஷ்மீரில் உள்ள லேவுக்கு கிளம்பியது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் டெல்லியிலேயே தரையிறங்கியது. சமீபகாலமாக தொழில்நுட்ப கோளாறுகளால் விமான பயணங்கள் தடைபடுவது அதிகரித்துள்ளது.