கடந்த 2017ம் ஆண்டு முதல் கீழடியில் அகழ்வாராய்ச்சி செய்து வந்த தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா டெல்லி நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசியல் கட்சிகள், தமிழர்களின் வரலாற்றை மத்திய அரசு மறைக்க நினைப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கிறது. இதுகுறித்து திமுக நேற்று போராட்டத்தையும் முன்னெடுத்தது. இந்த போராட்டம் டெல்லியிலும் நடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.