கர்நாடகாவில் ஐடி ஊழியர்களுக்கான வேலைகளை, 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த அம்மாநில அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஐடி தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், ஐடி ஊழியர்கள் பெரும் வேதனையில் உள்ளனர். முன்னதாக தெலங்கானா மாநிலத்தில் பணி நேரத்தை உயர்த்துவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.