தூத்துக்குடி: கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்க பூமியாகும் மன்னார் வளைகுடா கடல் பகுதி. இங்கு அரிய வகை ஆமை இனங்கள் உயிர் வாழ்கின்றன கடற்கரை பகுதிகளில் குஞ்சு பொரித்து வாழ்ந்து வருகின்றன மேலும் வனத்துறை சார்பில் அழிந்து வரும் ஆமை இனங்களை பாதுகாக்க ஆமையை மீனவர்கள் உனவுக்காக பிடிக்கவோ வேட்டையாடவும் தடை செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் அரிய வகை ஆமை அழுகிய நிலையில் கரையில் செத்து ஒதுங்கியது செத்து ஒதுங்கிய ஆமை சுமார் மூன்றடி நீளமும் 100 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது இதில் முகத்தில் கண்கள் இல்லாமல் வாய் மற்றும் இறக்கை பகுதிகள் சேதம் அடைந்து அழுகிய நிலையில் காணப்பட்டது கடற்கரையில் செத்து ஒதுங்கி கிடந்த ஆமையை கடற்கரைக்கு நடை பயிற்சிக்கு வந்த பொதுமக்கள் இளைஞர்கள் பார்த்து சென்றனர்
இதைதொடர்ந்து ஆமை செத்து ஒதுங்கியது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறை அதிகாரிகள் வந்து ஆமை எவ்வாறு இறந்தது யாரும் ஆமையை வேட்டையாடி கொன்றார்களா அல்லது இயற்கையாக ஆமை இறந்ததா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் ஆமையை அந்த பகுதியிலேயே உடற்கூறாய்வு செய்து புதைக்கவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.