மழை வெள்ளத்திற்கு பிறகு பள்ளிகள் திறப்பு!

73பார்த்தது
தூத்துக்குடி மாநகரில் கடந்த 17 18 ஆம் தேதியில் பெய்த கன மழை காரணமாக மாவட்டம் முழுவதும் மற்றும் மாநகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு மற்றும் அரையாண்டு விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறக்கப்பட்டன மாவட்டத்தில் உள்ள 1873 அரசு தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளி ஆகியவை இன்று திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்தனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பால் பல்வேறு தனியார் பள்ளிகளில் இன்னும் மழை நீர் தேங்கியுள்ளதால் 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படவில்லை இதேபோன்று ஒரு சில அரசு பள்ளிகளும் இன்று திறக்கப்படாமல் உள்ளது

மழை வெள்ள பாதிப்பால் புத்தகம் மற்றும் நோட்டுகளை இழந்தவர்களுக்கு இன்று பள்ளிகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது இதேபோன்று மழை காரணமாக தடைபட்ட அரையாண்டு தேர்வுகள் நாளை மூன்றாம் தேதி முதல் துவங்கி 6ம்தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

டேக்ஸ் :