உலக விலங்கு வழி நோய் தினம்: ரேபீஸ் தடுப்பூசி போடும் முகாம்

60பார்த்தது
ஜூலை 6 உலக விலங்கு வழி நோய் தினம் மற்றும் வெறி நாய் கடிக்கு ரேபிஸ் மருந்தை கண்டுபிடித்த லூயி பாஸ்டரை கொண்டாடும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் வி ஹெல்ப் பாவ்ஸ் என்ற அமைப்பு சார்பில் தூத்துக்குடியில் நாய்களுக்கான ரேபீஸ் தடுப்பூசி போடும் முகாம்

ஜூலை 6 ஆம் தேதி உலகம் முழுவதும் கடந்த 1885 ஆம் ஆண்டு லூயி பாஸ்டர் வெறி நாய் கடிக்காக ரேபிஸ் என்ற மருந்தை கண்டுபிடித்து ஒரு சிறுவனுக்கு பயன்படுத்தி குணமாக்கினார்.

இந்த நாளை உலகம் முழுவதும் லூயி பாஸ்டரை கொண்டாடும் வகையில் உலக விலங்குகள் வழி நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் கால்நடை பராமரிப்பு பன்முக மருத்துவமனை அலுவலகத்தில் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் வி ஹெல்ப் பாவ்ஸ் என்ற அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு வெறிநாய் கடித்தால் ஏற்படும் பாதிப்பு மற்றும் இதை தடுக்க வெறி நாய்களுக்கு நாய் வளர்ப்போர் தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் தெருவோரம் சுற்றி தெரியும் நாய்கள் மற்றும் வீட்டில் வளர்க்கும் நாய்கள் ஆகியவற்றிற்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது இந்த சிறப்பு முகாமில் பன்முக மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜோசப் ராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் நாய்களுக்கான தடுப்பு ஊசியை போட்டனர்.

தொடர்புடைய செய்தி