புத்தாண்டு திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

562பார்த்தது
புத்தாண்டு திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
தமிழ் கடவுள் ஆன முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு புத்தாண்டை ஒட்டி பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதை யாத்திரையாக வந்து வேல் குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவது வழக்கம்.

அந்த வகையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு கடந்த சில நாட்களாக பக்தர்கள் அதிகமானோர் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3. 30 மணிக்கு விஸ்வரூபத்தி பாரதனையும் 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்று மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது.

மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதாலும் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நாளை புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1. 30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது.

நாளை ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூருக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி