தூத்துக்குடியில் உள்ள வள்ளிநாயகபுரம் பகுதியில் நான்காவது மற்றும் ஐந்தாவது தெருவில் நடிகர் கார்த்தி ரசிகர் மன்றம் சார்பில் 50 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, வள்ளிநாயகபுரம் பகுதியில் இரவு நேரங்களில் பயங்கர ஆயுதங்களுடன் சமூக விரோதிகள் சுற்றி திரிவதாலும், தொடர்ந்து பெண்களை அச்சுறுத்தும் செயல்களில் சிலர் ஈடுபட்டு வந்ததாகவும், அப்பகுதியில் போதை ஆசாமிகளின் நடமாட்டம் அதிகரித்து வந்துள்ளது.
இந்த நிலையில் கேமரா வைக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே சமூக விரோதிகள் சிலர் கம்பு மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வந்து சிசிடிவி கேமராக்களை உடைத்து எறிந்துள்ளனர்.
இக்காட்சிகள் அனைத்தும் CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதைத் தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்கள் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்
இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் இந்த விஷயத்தில் தென்பாகம் காவல்துறையினர் உடனடியாக சிசிடிவி கட்சியில் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்
இதை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் வள்ளிநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், மூணு சென்ட் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், வசந்தகுமார் உள்ளிட்ட மூன்று வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.