மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி!

62பார்த்தது
தூத்துக்குடி தொடர் விடுமுறை காரணமாக திரேஸ் புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக இன்று திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக விலை குறைந்து காணப்பட்ட மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது சீலா மீன் ஒரு கிலோ 900 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரையும் விளைமீன் கிலோ 400 முதல் 500 ரூபாய் வரையும் ஊளிமீன் கிலோ 350 முதல் 450 ரூபாய் வரையும் பாறை மீன்கிலோ 400 ரூபாய் வரையும் சாலை ஒரு கூடை 700 ரூபாய் வரையும் அயிலை ஒரு கூடை 1500 ரூபாய் வரையும் விற்பனையானது இதேபோன்று குறுவளை கடல் விரால் ஆகிய மீன்களுக்கும் நல்ல விலை கிடைத்தது இதன் காரணமாக மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி