தூத்துக்குடி அய்யனடைப்பு சிவசக்தி நகரைச் சேர்ந்தவர்
ஜெயினுலாபுதின் மனைவி ஆஷா பைரோஸ் (44) கணவர் இறந்த நிலையில் மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவரது மகன் முகமது குலாம் காதர் (22) என்பவருடன் வசித்து வருகிறார். முகமது குலாமும் சிறிதளவு மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக அப்பகுதி மக்கள் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் மோகன்ராஜ், தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முகமது குலாம் காதரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், கடந்த 2ஆம் தேதி தனது தாய் ஆஷா பைரோஸ் இறந்து விட்டதாகவும், உறவினர்கள் யாரும் இல்லாததால் நானே தாயின் உடலை வீட்டிற்குள் குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அய்யனடைப்பு வி. ஏ. ஓ. , எட்வர்ட் புகாரின் பேரில்
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு
புதைக்கப்பட்ட ஆஷா பைரோஸ்
உடலை நாளை தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது.