பள்ளிக்குச் செல்ல அடம் பிடித்த குழந்தைகள்

56பார்த்தது
பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அடம் பிடித்த குழந்தைகள். சமாதானப்படுத்தி விட்டு சென்ற பெற்றோர்கள்.

தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி இன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததை ஒட்டி அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் உள்ள ஆக்ஸ்போர்ட் மழலையர் பள்ளியில் புதிதாக பள்ளி குழந்தைகள் சேர்க்கும் நிகழ்ச்சியும் பழைய மாணவர்கள் வருகை தந்த போதும் அனைவருக்கும் பள்ளியின் தாளாளர் எஸ் ராஜ்குமார் தலைமை ஆசிரியை எஸ் ஜெயந்தி ஆகியோர் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கைகுலுக்கி வரவேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் அறக்கட்டளை சேர்ந்த ஜெயந்தராஜ் ஆசிரியைகள் லட்சுமி கார்த்திகா கோமதி சாந்தி வினோத் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் முதன்முதலாக பள்ளியில் இன்று சேர்ந்த எல்கேஜி குழந்தைகள் பெற்றோரை பிரிய மனமில்லாமல் அழுது புலம்பியது பெற்றோர்களுக்கு சற்று நெருடலாக இருந்தது இருப்பினும் தனது குழந்தையின் எதிர்காலம் கருதி குழந்தைகளை சமாதானப்படுத்தி பள்ளியில் சேர்த்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி