காரிக்கோட்டை பொன்னியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா

72பார்த்தது
காரிகோட்டை பொன்னியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரிக்கோட்டை கிராமத்தில் பழமையான ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் திருவிழா கடந்த 25 ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கி நடைபெற்ற வருகிறது.

முக்கிய விழாவான முளைப்பாரி திருவிழா இன்று நடைபெற்றது. காரி கோட்டை கிராமத்தின் பல்வேறு தெருக்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாறியை தலையில் சுமந்து பொன்னியம்மன் கோவிலுக்கு எடுத்து வந்து கும்மியடித்து பாடல் பாடி வழிபாடு செய்தனர்.

முன்னதாக பொன்னி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொன்னியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய முளைப்பாரி ஊர்வலத்தில் பெண்கள் முளைப்பாறையை தலையில் சுமந்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காரிய அழகர் அய்யனார் கோவில் வழிபட்டனர். பின்னர் குளக்கரையில் முளைப்பாறியை நீரில் விட்டு பெண்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து இன்று இரவு அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது. முக்கிய விழாவான பூ பல்லக்கு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
Job Suitcase

Jobs near you