மன்னார்குடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

1063பார்த்தது
மன்னார்குடியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தூய வளனார் பெண்கள் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. மன்னார்குடி நகரமன்ற தலைவர் மன்னை சோழ ராஜன் தலைமையில் நடைபெற்ற முகாமில் 19, 20, 27, 28, 29 வார்டுகளை சேர்ந்த மக்கள் பங்கேற்று தங்க கோரிக்கை மற்றும் நீண்டநாள் பிரச்சினைகளை மனுவாக அளித்தனர். முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை பெற்று ஆன்லைன் மூலம் உடனடி தீர்வு காணப்பட்டது. மத்திய மாநில அரசுகளின் பல்வேறு மக்கள் நல திட்டங்கள், கடன் உதவிகள், ஓய்வூதியம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி