எண்ணூர் கோரமண்டல் உர தொழிற்சாலையில் அமோனியா நச்சுவாயு கசிவு ஏற்பட்டு அதை சுற்றியுள்ள மீனவ கிராம மக்கள் மூச்சுத் தென்றல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். இதனால் வாயு கசிவு ஏற்பட்ட ஆலையை மூடக்கோரி மக்கள் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் இன்று ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.