வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலி குடங்களுடன் போராட்டம்

52பார்த்தது
திருத்தணி அடுத்த அருங்குளம் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் கிராம மக்கள் பல முறை புகார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவாலங்காடு போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணுங்கள் என கூறியதையடுத்து

 காலி குடங்களுடன் பெண்கள் திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி