பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி நடிகை ஜெயலட்சுமி போலீசாரால் கைது செய்து திருமங்கலம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திரைப்பட பாடலாசிரியர் சினேகன் பெயரில் பவுண்டேஷன் ஒன்றை தொடங்கினார். அதே பெயரில் நடிகை ஜெயலட்சுமியும் பவுண்டேஷன் தொடங்கி நன்கொடை வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன் பெயரில் உள்ள பவுண்டேஷன் நன் மதிப்பை பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி நன்கொடை வசூலித்து மோசடி செய்துவருவதாக கவிஞர் சினேகன் புகார் அளித்திருந்தார்.
பவுண்டேஷன் யாருக்கு சொந்தம் என பாடலாசிரியர் சினேகனுக்கும் நடிகை ஜெயலட்சுமிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பாக கவிஞர் சினேகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். நீதி மன்றம் உத்தரவு படி நடிகை ஜெயலட்சுமி மீது வழக்கு பதிந்து மோசடி வழக்கில் கைது செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருதரப்பின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நடிகை ஜெயலட்சுமி தொடுத்த வழக்கில் முகாந்திரம் இல்லை என நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாரில் நேற்று காலை முதல் போலீசார் விசாரணை மேற்கொண்டு பின் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடிகை ஜெயலட்சுமி விஜய்யின் வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.