திருவள்ளூர்: எச்சரிக்கை.. 4 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

66பார்த்தது
திருவள்ளூர்: எச்சரிக்கை.. 4 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவியது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து நவம்பர் 25 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் கவனம் செலுத்தி, அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் வரும் 25 முதல் 28ம் தேதி வரை 4 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இதன் காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி