சாலையில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து கடல் போல் தேங்கியது

74பார்த்தது
திருத்தணி ரயில் நிலையம் வழியாக மழைநீர் வெளியேறும் இடத்தில் தண்டவாளம் இருப்பதால் மழைநீர் வடிகால்வாயை ரயில்வே நிர்வாக  முழுமையாக அடைத்து விட்டது. இதனால் இரவு பெய்த மழையின் காரணமாக போக வழி இன்றி திருத்தணி ரயில் நிலையம் சாலையில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து கடல் போல் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்கள் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது சில வாகனங்கள் தண்ணீரில் சிக்கிக் கொண்டு வாகனங்கள் பழுது ஏற்படுவதால் தண்ணீரில் இறங்கி தள்ளிச் செல்லுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அதே போல் அவழியாக  கார்கள், பஸ்கள் சென்று வரவும்  கடும் அவதி அடைந்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் எனவே மழைநீர் தேங்கி நிற்பதை  தடுக்க  ரயில்வே நிர்வாகத்துடன்   நகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று நகர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.