சோதனையில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

547பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார்  ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பைனான்ஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுத்து நிறுத்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் பல கட்டுப்பாடுகளை விதித்து கண்காணித்து வருகின்றது. இதற்காக நாடாளுமன்ற தொகுதி அளவில் வருமானவரித் துறை அதிகாரிகள் நியமித்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.   திருத்தணியில் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜெயக்குமார் என்பவர் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 10 பேர் குழு கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று திருத்தணியில் உள்ள அவரது  வீட்டில் காலை 8. 30  மணி முதல்  மாலை 5 மணி வரை 9 மணி நேரம் நடைபெற்ற தொடர் சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

தொடர்புடைய செய்தி