நகராட்சியில் 250பணியாளர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு அட்டை

67பார்த்தது
நகராட்சியில் 250பணியாளர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு அட்டை
பூந்தமல்லி நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 250 பேருக்கு தனியார் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. பூந்தமல்லி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. சென்னை மதுரவாயல் ஏசிஎஸ் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஸ்ரீதர், நகராட்சி ஆணையர் லதா, மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர், பொறியாளர் ஜெயகுமார், சுகாதார அலுவலர் வெயிலுமுத்து, சுகாதார ஆய்வாளர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் பங்கேற்ற நகராட்சி பணியாளர்களுக்கு பொது மருத்துவம், பன்முனை மருத்துவ பரிசோதனை, கண், பல், காது – மூக்கு – தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதயநோய், தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு ஏசிஎஸ் மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
முகாமின் ஒரு பகுதியாக நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி