திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இருவரிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கடப்பாவைச் சேர்ந்த வெங்கடேசலு (50), திருவொற்றியூரை சேர்ந்த ஸ்ரீதர் (53) ஆகிய இருவரைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு சென்னை புறநகர் மற்றும் பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக கஞ்சா போதை மாத்திரைகள் கடத்தி செல்லப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரிப்பதை கருத்தில்கொண்டு காவல்துறையினர் உரிய ரோந்து பணிகளை மேற்கொண்டும், வாகன தணிக்கை செய்தும் தடுத்து நிறுத்திட வேண்டும் என கோரிக்கை எழந்துள்ளது.