திருவொற்றியூர், தியாகராஜா சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், அக். , 3ம் தேதி நவராத்திரி திருவிழா துவங்க உள்ளது. இதற்கான பந்தக்கால் நடும் வைபம் நடந்தது. முன்னதாக, வடிவுடையம்மன் சன்னிதியில் கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு, விசேஷ பூஜைகள் நடந்தன.
அதைத்தொடர்ந்து, கலசம் புறப்பாடாகி அம்மன் சன்னதி வெளியே, பந்தக்கால் மரத்திற்கு, பால், பன்னீர், கலச நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடந்தது. நிறைவு நாளான, 12ம் தேதி இரவு, உற்சவ தாயார் மீனாட்சி அலங்காரத்தில் எழுந்தருள்வார். பின், தியாகராஜர் மாடவீதி உற்சவத்துடன் விழா நிறைவுறும்.
வடிவுடையம்மன் கோவில், நவராத்திரி திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என்பதால், கோவில் உதவி கமிஷனர் நித்யா தலைமையிலான ஊழியர்கள் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.