இந்தியா கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்து எம்எல்ஏ பிரச்சாரம்

80பார்த்தது
இந்தியா கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்து எம்எல்ஏ பிரச்சாரம்
மாண்புமிகு தமிழக முதல்வர், கழக தலைவர் திரு முக ஸ்டாலின் அவர்கள் ஆணைகிணங்க இன்று (13/04/2024) காலை 08: 30 மணி முதல், திருநின்றவூர் நகர செயலாளர் திரு தி வை இரவி மற்றும் பூவிருந்தவல்லி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு தேசிங்கு அவர்கள் ஏற்பாட்டில், இந்தியா கூட்டணியின் வேட்பாளரான திரு. சசி காந்த் செந்தில் அவர்களுடன் இணைந்து 2024 நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு, திருவள்ளூர் மத்திய மாவட்டம், திருநின்றவூர் நகரத்திற்கு உட்பட்ட செல்வ விநாயகர் கோவில், PTMS, கெங்கு ரெட்டி குப்பம், MGR நகர், பிரகாஷ் நகர், நடுகுத்தகை தேவி நகர், நாச்சியார் சத்திரம், ராமதாஸ் புரம், தாசர் புரம், பெரியார் நகர், இந்திரா நகர் நெமிலிசெரி உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணியின் வேட்பாளரான திரு. சசி காந்த் செந்தில் அவர்களை ஆதரித்து ஆவடி சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சாமு நாசர் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார்.

உடன் வேட்பாளரான திரு. சசிகாந்த் செந்தில் மற்றும் இ. ந். தி. யா கூட்டணி கட்சி நிர்வாகிகள், திருவள்ளூர் மத்திய மாவட்ட தி. மு. க வின் மாவட்டக் கழக நிர்வாகிகள், மாநகரக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி