தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த ஆதிமூலம் என்பவர் இன்று வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் முக்கூடல் பகுதியில் உள்ள வாறுகால் கழிவுநீர் முழுவதும் நன்னீர் ஓடையாக இருந்த பகுதியில் திறந்து விடப்பட்டு அந்த ஓடை முழுவதும் சாக்கடையாக மாறி தாமிரபரணியில் கலப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தாமிரபரணியில் கழிவு நீர் கலக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.