தமிழ்நாடு அரசின் உ. வே. சா விருது (2022) பெற்றவரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகியும், எழுத்தாளருமான பாளையை சேர்ந்த இரா. நாறும்பூநாதன் நேற்று இயற்கை எய்தினார். இந்நிலையில் நெல்லை மாவட்ட முன்னாள் ஆட்சி தலைவர் கார்த்திகேயன் இன்று பாளையங்கோட்டில் உள்ள இல்லத்திற்கு சென்று நாறும்பூநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.