கரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், மாணவியின் கழுத்தை அறுத்ததாகவும் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாணவியை கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்படவில்லை என கூறியுள்ளார். இதனால், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என போலீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறுமியின் உறவினரான அந்த சிறுவன், மாணவி அணிந்திருந்த தங்கச் செயினையும் பறித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.